Friday, September 27, 2013

மெமரி கார்டு தன்மை வகைகள் குறித்த சில தகவல்கள் !
மெமரி கார்டு தன்மை, வகைகள் குறித்த சில தகவல்கள் !!
செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றனஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் நான்கு வகை கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்….

எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters). SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும். எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.

இதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும். எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.

இதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும். SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமின் படி நாம் இதை பார்மேட் செய்ய வேண்டும் ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம். ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.

Thanks inruoruthagaval...

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....


Wednesday, September 18, 2013

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்.


நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம்.  மேலும் பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம்.

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் முதல் வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு  தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
கீழ்  கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
 
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது.

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும்.

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை.

ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்.

இந்த எண்களை எல்லா பிளாஸ்டிக் பொருள்களிலும் காணலாம்.


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Monday, April 15, 2013

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD
Alt + 0153..... ™... trademark symbol

Alt + 0169.... ©.... copyright symbol

Alt + 0174..... ®....registered ­ trademark symbol

Alt + 0176 ...°......degre ­e symbol

Alt + 0177 ...±....plus-or ­-minus sign

Alt + 0182 ...¶.....paragr ­aph mark

Alt + 0190 ...¾....fractio ­n, three-fourths

Alt + 0215 ....×.....multi ­plication sign

Alt + 0162...¢....the ­ cent sign

Alt + 0161.....¡..... ­.upside down exclamation point

Alt + 0191.....¿..... ­upside down question mark

Alt + 1.......☺....sm ­iley face

Alt + 2 ......☻.....bla ­ck smiley face

Alt + 15.....☼.....su ­n

Alt + 12......♀.....f ­emale sign

Alt + 11.....♂......m ­ale sign

Alt + 6.......♠.....s ­pade

Alt + 5.......♣...... ­Club

Alt + 3.......♥...... ­Heart

Alt + 4.......♦...... ­Diamond

Alt + 13......♪.....e ­ighth note

Alt + 14......♫...... ­beamed eighth note

Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)

Alt + 251.....√.....s ­quare root check mark

Alt + 8236.....∞..... ­infinity

Alt + 24.......↑..... ­up arrow

Alt + 25......↓...... ­down arrow

Alt + 26.....→.....ri ­ght arrow

Alt + 27......←.....l ­eft arrow

Alt + 18.....↕......u ­p/down arrow

Alt + 29......↔... l ef­t right arrowதங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....


Friday, March 29, 2013

மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க....


பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது. அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.
முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும். உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.


வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.

copy d:\windows\system32\sethc.exe d:\

மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.

copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe

கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும். பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும். அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.


net user TCINFO passwd
  


இதில் net user என்பது இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர் கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும் கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.

மீண்டும் வேறொரு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமெனில், முதலிலிருந்து மீண்டும் அப்படியே செய்யவும். இது விண்டோஸ் 8 ற்கும் பொருந்தும்.
Thanks : tamilcomputerinfo

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Thursday, February 21, 2013

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் எவை தெரியவேண்டுமா.?உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது?  கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம். 

20.Amazon.com: 

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

19. Sina.com.cn: 

மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம். 2000 ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் யாஹு தளம் என்ற பெயரை இது பெற்றிருந்தது. 2009ல் Weibo என்ற பெயரில் வலைமனை தளம் ஒன்றையும் இது தொடங்கியது. இந்த தளத்தில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம். 

18. WordPress.com: 

17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைமனைத்தளம். மிக எளிமையான வலைமனை சாதனங்களை இலவசமாக வழங்கி, தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இந்த தளம் பெருக்கிக் கொண்டது. 

17. Apple.com: 

ஆப்பிள் சாதனங்கள் மற்றும் அவற்றிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான தனி தளம். இவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்குவதற்கான தகவல்களைத் தரும் தளமும் கூட. வாடிக்கையாளர் எண்ணிக்கை 17 கோடியே 17 லட்சம். 

16. Sohu.com : 

சீன நாட்டில் இயங்கும் பல்நோக்கு இணைய தளம் மற்றும் தேடல் தளம். 1997 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் ஆன்லைன் சர்ச் இஞ்சின் தளமாக இது தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு பல்நோக்கு இணைய தளமாகவும், ரியல் எஸ்டேட் இணைய தளமாகவும் வளர்ந்து, இன்று 17 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 

15. Bing.com: 

மைக்ரோசாப்ட் தன்னுடைய இந்த தளம் குறித்து மிக தீவிரமாக விளம்பரம் செய்தது. மிக எளிதாக தேடலையும் முடிவுகளையும் தரக்கூடிய தளமாக இதனை காட்டி முன்னுக்குக் கொண்டு வர முயன்றது. அதற்கேற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தினையும் இணைத்தது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18 கோடியே 40 லட்சம். 

14. Twitter.com: 

ரியல் டைம் தொலை தொடர்பினைத் தரும் இணைய தளம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல், உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மக்கள் அணுகும் ஓர் இணைய தளமாக உருவெடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில், பல நிறுவனங்கள், அரசியல் வாதிகள், மக்கள் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் இதில் தகவல்களைத் தருகின்றனர். இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 98 லட்சம். 

13.Taobao.com: 

20 கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. eBay, Amazon போல மிகப் பெரிய வர்த்தக இணைய தளம். இதன் உரிமையாளரான Alibaba.com, இதனை எந்தக் கட்டணமும் இல்லாத தளமாகக் கொண்டு வந்த நாள் முதல், இது தொடர்ந்து பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் தளமாக உள்ளது. 

12. Ask.com: 

21 கோடியே 84 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். கூகுள் இதன் பின்னணியில் உள்ளது. இது முதலில் தொடங்கும்போது Askjeeves.com என இருந்தது. பின்னர் மாற்றங்களை அடைந்தது. 

11. Blogger.com: 

மிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, இந்நிறுவனம், இணைய தளங்கள் சரிவைச் சந்தித்த போது, தள்ளாடியது. பின்னர், 2002ல், கூகுள் இதனை மேற்கொண்டு தற்போது உயரக் கொண்டு வந்துள்ளது. வலைமனை அமைப்பாளர்கள் அதிகம் நாடும் தளம் இதுதான். 22 கோடியே 99 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். 

10. MSN.com: 

மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம். 

9. Baidu.com: 

வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம். 

8. Micorosoft.com: 

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம். 

7. QQ,com: 

சீனாவில் இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர் என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

6. Live.com: 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம். 

5. Wikipedia.org: 

46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம். இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள் தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர். 

4. Yahoo.com: 

இணைய பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம். 

3. Youtube.com: 

பயனாளர்கள் உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர் அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம். 

2. Google.com: 

78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல் தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில், ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது. 

1. Facebook.com: 

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது. பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின் மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Friday, December 21, 2012

ஆண் என்பவன் யார்..?
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...

ஆண் என்பவன் யார்..? 
...
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்...!
Thanks to பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்...


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Monday, December 10, 2012

When Will Windows 8 Release Preview Expire?

If you are a Windows 8 Release Preview user like me, you might be interested in knowing how long you can use the Windows 8 Release Preview..


When will Windows 8 Release Preview expire?

You will be able to use the Windows 8 Release Preview until January 16, 2013 after which your Windows 8 Release Preview installation will expire.
If you want to find out when your Windows 8 Release Preview expires, here’s a simple tip to find it.
1. Press Windows Key + R. This is a shortcut key to open the command prompt.
2. Enter the text winver in the command prompt and press the enter key.
When will Windows 8 Release Preview expire?

new Dialog (About Windows) will be displayed. This window includes the Windows 8 Release Preview information like the version number (Version 6.2 – Build 8400) and the Expiry date of the Evaluation Copy of Windows 8 Release Preview.

When will Windows 8 Release Preview expire?<Naina>
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....