Friday, December 21, 2012

ஆண் என்பவன் யார்..?




எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...

ஆண் என்பவன் யார்..? 
...
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்...!




Thanks to பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்...


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Monday, December 10, 2012

When Will Windows 8 Release Preview Expire?

If you are a Windows 8 Release Preview user like me, you might be interested in knowing how long you can use the Windows 8 Release Preview..


When will Windows 8 Release Preview expire?

You will be able to use the Windows 8 Release Preview until January 16, 2013 after which your Windows 8 Release Preview installation will expire.
If you want to find out when your Windows 8 Release Preview expires, here’s a simple tip to find it.
1. Press Windows Key + R. This is a shortcut key to open the command prompt.
2. Enter the text winver in the command prompt and press the enter key.
When will Windows 8 Release Preview expire?

new Dialog (About Windows) will be displayed. This window includes the Windows 8 Release Preview information like the version number (Version 6.2 – Build 8400) and the Expiry date of the Evaluation Copy of Windows 8 Release Preview.

When will Windows 8 Release Preview expire?<Naina>
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Wednesday, November 28, 2012

இசையமைப்பதற்கு கூகுள் குரோம்பிரவுசர் போதுமே...



இப்போது கூகுள் குரோம்பிரவுசர் மட்டுமே போதும் அல்லது ஜாம் வித் குரோம் -ஐ நாம் டவுன் லோட்  செய்ய வேண்டு நம்மிடம் இவற்றிற்கு எந்த இசைக்கருவியோ, மென்பொருட்களோ தேவையில்லை.அல்லது  உலவி இருந்தல்மட்டுமே போதும் . இசை அமைப்பு கருவிகள் திராயில் தோன்றும்.  jamwithchrome.com இணையத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் இசைக்கருவியை தெரிவு செய்யவும். 19 இசைக்கருவிகளை 3க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் இணைந்து வாசிக்கலாம்.
Source Thanks to Techtamil....
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....


Monday, November 5, 2012

சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜேர்மன் உலக சாதனை படைத்துள்ளது







சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜேர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜேர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜேர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.

இந்தாண்டு ஜேர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.

இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)

இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ‌ஜேர்மன் சாதனை படைத்துள்ளது.


FYI:

எங்கள் ஊரில் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தான் செயல் படுத்துவோம் . இருக்கிற நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்போமே தவிர
சூரிய மின்சாரம் தயாரிக்க விட மாட்டோம்.... 


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....


Monday, October 22, 2012

பகட்டான உலகில் ஒரு பதமான மனிதர்...


பகட்டான உலகில் ஒரு பதமான மனிதர் -


ஹாஷிம் அம்லா அவர்கள் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 3 சதம அடித்த போது நோன்பு நேரம். அப்போதும் நோன்பு பிடித்துக் கொண்டே 3 நாள் தொடர்ந்து விளையாடினார் என்று அறிய வந்தோம்

ஆஸ்திரேலியாவில் என்று எண்ணுகிறேன் ஹாஷிம் அம்லா அவர்கள் ஒரு கேட்ச் பிடித்துவிட ஆங்கில வர்ணனையாளர் தீவிரவாதி கேட்ச் பிடித்துவிட்டார் என்று சொல்ல பிரச்னை எழுந்தது. (யார் தாடி வைத்திருந்தாலும் அவர்களுக்கு தீவிரவாதிதான்.....) ஆனால் அதைப் பற்றி ஹாஷிம் அம்லா அவர்களிடம் கருத்து கேட்ட போது சிரித்து அந்த விவகாரத்தை விகாரம் ஆக்காமல் புறந்தள்ளியது ஒர் இறையச்சமுடையவரின் பொறுமை மாண்பை படம் பிடித்துக் காட்டியது..

பகட்டான உலகில் ஒரு பதமான மனிதர் - ஹாஷிம் அம்லா.
----------------------------------------------------------------------------------------------------------

பகட்டும் படாடோபமும் நிறைந்தது கிரிக்கட் உலகம். கோடிக் கணக்கில்
பணம் புரளுவதால்,ஒரு வேளை, அப்படி இருக்கலாம். அதன் சாபக்
கேடுகளில் ஒன்று மது விருந்துகள். அத்தகையவற்றில் மூழ்கி விடாமலும்,
சுடு மூஞ்சியாய் ஒதுங்கி விடாமலும் சுயம் காத்து நிற்கும் ஓர் அற்புதமான
மனிதர் தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் வீரர். முகம்மது ஹாஷிம் அம்லா ! உலகத்
தர வரிசையில் முதலாம் இடத்தில் நிற்பவர். தென் ஆஃப்ரிக்க அணியின்
தூண் - துவக்க ஆட்டக்காரர்.

மொட்டைத் தலை - முகம் நிறையத் தாடி - செக்கச்செவேல் என்ற நிறம் -
உயரத்தாலும் ஒழுக்கத்தாலும் கூட மிக உயர்ந்த மனிதர் இவர். பேட் செய்யும்
நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழுகையின்வக்துவந்தால் அந்தந்த
இடங்களிலேயே தொழுது விடுவார். ஆடவேண்டிய நாட்களிலும் தவறாது
நோன்பு நோற்பார் இந்திய,குஜராத் மாநில, சூரத் நகரை பூர்வீகமாகக் கொண்டவர்
முகம்மது ஹாஷிம் அம்லா ! .நல் வழி நடப்பவர். நபி வழியை பேணுபவர். கிழம்
அல்ல.பூத்துக் குலுங்கும் இளமைக்குச் சொந்தக்காரர்.

தென் ஆஃப்ரிக்காவுக்காக ஆடும் வீரர்களின் சட்டையில் ஒரு மதுபான விளம்பரம்
இடம் பெற்றிருக்கும் அதற்காக தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் அமைப்புக்கும் கோடிக்
கணக்கில் வருமானம் வருகிறது. அதிலிருந்து லட்சக் கணக்கில் பணம் வீரர்களுக்கும்
வழங்கப் படுகிறது.

அம்லா தென் ஆஃப்ரிக்க அணிக்காக ஆடத் தேர்ந்தெடுக்கப் பட்ட போது இத்தகைய
ஒரு சட்டையை அணிந்து கொள்ளும்படி கேட்கப்பட்டார். மதுபான விளம்பரம்
இருப்பதால் முடியாது என்று மறுத்தார். அப்படியானால் காசு கிடைக்காது என்றார்கள்.
பரவாயில்லை என்றார். அணியை விட்டே நீக்கப் பட நேரிடலாம் என்பது வீசப் பட்ட
அடுத்த குண்டு...! கொள்கைய விட்டுள்ள புகழ் வேண்டாம். கண்ணை விற்றும் சித்திரம்
வேண்டாம் என்றார் உறுதியாக..!

ஆரம்பத்தில் அணி வீரர்கள் கூட கிண்டலும் கேலியும் செய்தார்கள். அம்லா அதை
பொறுமையுடனும் புன்னகையுடனும் சகித்துக் கொண்டார். ஆனால் இன்று நிலை வேறு.
அவரை ஒரு ஞானிபோல் மதித்துப் போற்றுகிறார்கள்
இந்த மொட்டைத் தலை மனிதர்..இன்று மட்டை ஆட்சியில் மன்னர்.....

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Tuesday, September 18, 2012

சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி??



சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி??




Software Engineers மொத்தம் ரெண்டு வகை,
காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressureனு வீட்ல போய் அம்மா,அப்பா,பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி.இவங்க, அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய், சம்பாரிச்சு, மண்டைல முடி கொட்டி, கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாங்க.... இவங்களுக்கு நம்ம அட்வைஸ் ஏதும் தேவை இல்ல....



ரெண்டாவது கோஷ்டி:
வேல செய்ய புடிக்காம, கடுப்புல வந்து, ஏனோ தானோன்னு வேல செஞ்சு, increment இல்லாம,onsite இல்லாம, வீட்ல, 'சாப்பாட்ல உப்பு இல்லன்னு' சொன்னா,' PCS/Cunfosys/GTS/JCLல தான வேல செய்யற??' ன்னு நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி,தினமும் Managerகிட்ட 'You have to put some extra efforts man'ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற 73% பேரு....


இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே முன்னேறரதுக்கு எளிய வழிகள்:

*.காலைல மேனேஜர் office போறதுக்கு முன்னாடி நம்ம போயரனும்,Evening அவர் கெளம்புனதுக்கு அப்புறம் தான் நம்ம கெளம்பனும்(அந்த timeல வேல செய்யனும்கறது முக்கியம் இல்ல....).....

*. 5 mins வேலையா இருந்தாலும், பெருசா build up பண்ணனும்,
For example,
உங்க lead சின்னதா excel sheetla ஒரு fieldla ஏதாவது change பண்ண சொன்னாங்கன்னா, அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு,

Hi Ramesh,

As discussed with you yesterday evening over phone, I have successfully changed 3rd row, 4th column of the 'employee details' excel sheet.
Please find the updated excel sheet in the following folder path,

<<folder path/file name>>

Please reply back for any clarifications

Thank you,
XXXXXXXXXXXXXX,
Software Analyst,
YYYY Consultancy Solutions,
Chennai.

அப்படின்னு 5 நிமிஷ வேலைக்கு 15 நிமிஷம் செலவு பண்ணி மெயில் போடணும்....Team members, module lead, group lead, project manager எல்லார்த்தையும் CCல வெக்கணும்....

* .birthday celebrations, Team outingநா, மூஞ்சில cake பூசறது , photo எடுக்கும்போது கொம்பு வெக்கறது , அப்பப்ப ரெண்டு மூணு மொக்கைய போடறதுன்னு நல்லா 'performance' பண்ணனும்....


*Managera எதிர்த்து பேசவே கூடாது, manager சொன்னா ஒன்னும் ஒன்னும் மூணு....

* தெரியாம கூட , 'தெரியாது' ங்கற வார்த்தைய சொல்லிரவே கூடாது. சுத்தமா தெரியாத ஒரு tool, software அல்லது technology பத்தி manager/lead கேட்டா கூட ,
Its a kind of,Its a sort of, In the sense, usability, modularity, quality, technically speaking , cost cutting, probably, actually இந்த மாதிரி வார்த்தைகள போட்டு, ஒரு statement குடுத்தரனும்...

*.Client visit வந்தா, clientsஓட நல்லா interact பண்ணனும்.
What do you think about Indian culture?,
Which one u like most, Dosa or Chappathi?
What will be the future of Indian Software Engineers?(அங்க Eurozone crisis வந்து, கொஞ்ச நாள்ல அவன் futureருக்கே வழியில்லன்னு தெரிஞ்சிருந்தாலும் பரவால்ல....)
இந்த மாதிரி மொக்கத்தனமான கேள்வியெல்லாம் கேக்கணும்....

*. அப்பப்ப sweets எடுத்துட்டு வரணும்,

Hi All,
Sweets at my desk, Please help yourselves,

அப்டின்னு mail போட்டு எல்லார்த்துக்கும் குடுக்கணும்....இப்படி டகில்பாஸ் வேல செஞ்சாதான் நம்மளோட managerஉக்கு நம்மளோட teamwork தெரியும்.

இது போக அப்பப்ப யாருக்காவது ஏதாவது சொல்லிக்குடுக்கனும் (எல்லார்த்துக்கும் தெரியுற மாதிரி சத்தமா ), Juniorsக்கு அட்வைஸ் பண்ணனும் ,Team movie போனா ticket book பண்ணனும் ,cab book பண்ணனும், Clean shave, formalsனு Raymonds model மாதிரி சுத்தனும்.

இப்படி மேல சொன்ன வேலையெல்லாம் செஞ்சா , Software fieldல முன்னேறி, onsite போயி, சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி, ஊற தாண்டி ஊரப்பாக்கத்துல ஒரு இடம் வாங்கி settle ஆயிறலாம்....


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....


Tuesday, August 21, 2012

Software Company....

Software Company



ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – 

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் அப்பா. 



"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். 
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல 
இருந்தே செய்யணும். 
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய 
தயாரா இருக்கான்." 

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, 
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். 
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. 
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம். 

"சரி" 

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க 
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". 

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. 

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? 

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை. 

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"? 

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க." 

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு 
எதுக்கு MBA படிக்கணும்?" – 

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?" 

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் 
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள 
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. 
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு 
ப்ராஜெக்ட் கிடைக்கும்" 

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் 
முடிக்க முடியாதே?" 

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க 
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். 

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் 
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. 
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். 
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, 
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். 

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். 

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே 
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம். 

"CR-னா?" 

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க 
வேலை பார்த்துட்டோம். 
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு 
சொல்லுவோம். 
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." 

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. 

"இதுக்கு அவன் ஒத்துபானா?" 

"ஒத்துகிட்டு தான் ஆகணும். 

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?" 

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?" 

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். 
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. 
இவரது தான் பெரிய தலை. 
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." 

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் 
தெரியும்னு சொல்லு." 

"அதான் கிடையாது. 

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது." 

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – 

அப்பா குழம்பினார். 

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் 
ஆகுறது தான் இவரு வேலை." 

"பாவம்பா" 

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. 
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?" 

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. 
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை 
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை." 

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!" 

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு 
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க." 

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா 
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?" 

"வேலை செஞ்சா தானே? 
நான் கடைசியா சொன்னேன் பாருங்க... 
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" 
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி 
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க." 

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? 
அவங்களுக்கு என்னப்பா வேலை?" 

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது 
இவனோட வேலை. 

புடிக்காத மருமக கை பட்டா குத்தம், 
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி." 

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? 
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. 
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?" 

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, 
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு 
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை 
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க" 

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? 

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?" 

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே 
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்." 

"எப்படி?" 

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. 
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, 
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." 
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். 
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, 
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்". 

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய 
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?" 

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம 
தான் இருக்கணும்." 

"அப்புறம்?" 

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான 
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க 
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்." 

"அப்புறம்?" 

"அவனே பயந்து போய், 
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு 
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" 

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." 
இதுக்கு பேரு "Maintenance and Support". 
இந்த வேலை வருஷ கணக்கா போகும். 
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு 
கூட்டிட்டு வர்றது மாதிரி. 

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு 
புரிய ஆரம்பிக்கும். 

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா...


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....





Wednesday, June 13, 2012

மேம்படுத்தப்பட்ட கூகிளின் தேடல் - Knowledge Graph


இணையத்தில் தேடுவது என்றாலே அது கூகிளில் தான். உலக மக்களின் ரசனைக்கு ஏற்ப கூகிளின் தேடல் உத்திகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பதாலே கூகிள் தேடுபொறி இணையத்தில் முதன்மையானதாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் பகிர்ந்த தளங்களிலிருந்து விரைவாக தகவல்களை எடுத்துக் கொடுக்குமாறு Personal Search என்ற உத்தியை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது கூகிள் தேடலில் Knowledge Graph என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

Knowledge Graph என்றதும் புரியாமல் விழிக்க வேண்டாம். கூகிளில் ஒரு விசயத்தைப் பற்றி தேடும் போது அதற்குப் பொருத்தமான தளங்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைக் காட்டும். ஆனால் இப்போது வழக்கமான தேடல் முடிவுகளோடு அந்த விசயத்தைப் பற்றிய புகைப்படம் அல்லது மேப், சிறிய குறிப்பு, அதன் தொடர்புடைய தேடல்கள்(Related Searches) போன்ற மேலதிக தகவல்களை வலதுபுறத்தில் சைட்பார் போன்று காட்டும்.

இதன் மூலம் விரைவாக நீங்கள் தேடும் ஒரு விசயத்தைப் பற்றிய மேலோட்டத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் பிற மக்கள் இதனோடு தொடர்புடைய வேற விசயங்கள் என்னென்ன தேடியிருக்கிறார்கள் என்றும் அறியலாம். இந்த வசதியில் முக்கிய பிரபலங்கள், நடிகர்கள், தலைவர்கள், திரைப்படங்கள், நகரின் முக்கிய கட்டிடங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள், முக்கிய இடங்கள் (Landmarks) போன்றவற்றைத் தேடும் போது இந்த உடனடிக் குறிப்புகளைப் பெறலாம்.

கீழிருக்கும் மாதிரி தேடல்களைப் பார்த்தால் எளிதாகப் புரியும்.
1. Popular Persons
2. Landmarks
3. Space things
4. Movies
இந்த அட்டகாசமான கூகிளின் மேம்படுத்தப்பட்ட Knowledge Graph தேடல் வசதி இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். தற்போது Google.com முகவரியில் செயல்படுகிறது.




பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லவும்.



Friday, May 4, 2012

கணினியின் IP எண்ணை வைத்தே பயன் படுத்துபவர்களின் விவரங்கள் அறிய...


நாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்த ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி I.P எண் கொடுத்து வேறுபடுத்தி இருப்பார்கள். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள் அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். மற்றும் இதன் மூலம் நமக்கு வரும் மெயில்களை அவற்றின் அனுப்பிய IP எண்ணை வைத்து அந்த மெயிலின் உண்மை தன்மையை கண்டறியலாம்.
மென்பொருளை பயன் படுத்தும் முறை:
  • இதற்கு முதலில் கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Download செய்து கொள்ளுங்கள்.
  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
  • அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
  • இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம் இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணினி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
  • அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Monday, April 16, 2012

PINTEREST சமூக இணைய தளம் அபார வளர்ச்சி பாதையில்...


சமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம்.
பெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும். ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள சமூக இணையதளம் Pinterest.

சிறப்பம்சங்கள்:
  • இந்த தளத்தில் நீங்கள் போட்டோ அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். சாதாரண செய்திகளை பகிர முடியாது.
  • இந்த தளத்தின் தோற்றம் பெரும்பாலானவர்களை கவரக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த Pinterest தளத்தில் உங்கள் பிளாக்கில் உள்ள போட்டோக்களை நேரடியாக பகிர்ந்து உங்கள் பிளாக்கின் வாசகர்களை (Traffic) அதிகரித்து கொள்ளலாம்.
  • போட்டோ அல்லது வீடியோ பகிரும் பொழுது அதற்கு சம்பந்தமாக தனி தனி பிரிவுகளில் பகிரலாம். மொத்தம் 30 க்கும் அதிகமான வகைகள் இந்த தளத்தில் உள்ளது.
  • குறைந்த நாட்களிலேயே மாதத்திற்கு 21 மில்லியன் வாசகர்களை பெறும் சிறந்த சமூக இணையதளமாகும்.
ஆனால் இந்த சமூக இணையதளத்தில் நேரடியாக கணக்கு open செய்து உபயோகிக்க முடியாது. முதலில் இந்த தளத்தில் சென்று உங்கள் ஈமெயிலை கொடுத்து INVITE அனுப்ப வேண்டும். பிறகு அவர்கள் உங்களுக்கான உறுப்பினர் விவரங்களை மெயிலில் அனுப்புவார்கள். பிறகு தான் உங்களால் Pinterest தளத்தை உபயோகிக்க முடியும்.
உபயோகிப்பது எப்படி:
Approval கிடைத்தவுடன் இந்த தளத்தில் நுழைந்து Add என்பதை அழுத்தி வரும் window-வில் உங்களுடைய போட்டோ இணையத்தில் இருந்தால் Add a Pin என்பதையும், உங்கள் கணினியில் இருந்தால் Upload a Pin என்பதையும் அழுத்தி உங்களுடைய போட்டோவை தேர்வு செய்து உங்களுடையை போட்டோவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.
இந்த சமூக இணையதள முகவரி -http://pinterest.com/

Thanks to TechTamil

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....