Monday, May 30, 2011

மனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்.....



மனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்













திருடர்களை கண்டுபிடிக்க அவர்களின் அடையாளத்தை வைத்து உருவத்தை வரைவார்கள் அதைப் போன்று தான் இதுவும். தலை, கண் , முடி, மூக்கு, வாய், மீசை….என அணைத்து உறுப்புகளும் நிறைய வடிவங்களில் கொடுக்கப் பட்டுள்ளது, அதை எடுத்து உங்கள் கற்பனைக்கு தகுந்தாற்போல் மனித முகங்களை உருவாக்குங்கள்.....
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.

Friday, May 20, 2011

நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா நண்பர்களே.....





விஷயம் என்னவென்றால், Bluetooth Earphone உபயோகிக்கலாமா..? Cordless Landline Phone உபயோகப் படுத்தலாமா என்று கேள்விகள் பிறந்துள்ளன. இரண்டுமே  Bluetooth wireless technolgy வகையை சேர்ந்த மிகவும் அரிய மகத்தான சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகள்தான். இவற்றையும் செல்ஃபோன் போல காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் மணிக்கணக்கில் அடிக்கடி பேசுவதற்காக உபயோகிக்கும்போது அதே ஆபத்துக்கள் வரலாம் என்கின்றனர் சிலர், வராது என்கின்றனர் பலர்..! எது சரி..? ஏனெனில், இவை தருவதும் அதே microwave radiation தான் என்கின்றனர் சிலர்..! இல்லை... இல்லை... பாதிப்பு இல்லாத Radio Waves-களைக்கொண்டு ப்ளூடூத் இயர்/ஹெட்ஃபோன்கள்  செயல்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்கின்றனர் பலர்..! எது சரி..? தற்போது ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலைகள் எவை..? இதுதான் இப்போது எல்லா குழப்பத்துக்கும் முக்கிய பிரச்சினை. 



ஆகவே, Microwave என்றால் எவை..?
Radio wave என்றால் எவை..?
இதற்கு விடை தெரிந்தால் அனைத்தும் புரிந்துவிடும் அல்லவா..?

Microwave :  இவை 300 MHz (0.3GHz) முதல் 300 GHz வரை frequency கொண்ட சக்திமிக்க மின்காந்த அலைகள். 

Radio Wave :   இவை 3 KHz  (0.003 MHz) முதல்  300 GHz  வரை (Microwave அலைக்கற்றைகளையும் உள்ளடக்கிய...) frequency கொண்ட சக்தி குன்றிய மற்றும் சக்தி மிக்க மின்காந்த அலைகள்.  அதாவது, Radio wave-ன் மற்றொரு கடைக்கோடியில் இருப்பவைதான் சக்திமிக்க Microwave..!


ஆக, நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயம், நமது Bluetooth  Headset (Speaker+Mic) / Blutooth Earphone (only speakers for mp3) அல்லது Cordless land line Phone முதலியன எந்த frequency-ல் செயல்படுகிறன என்பதைத்தான்..! அது சக்தி குன்றிய ரேடியோ frequency-ல் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.  பிரச்சனைக்குறிய Microwave Frequency-ல் இருந்துவிடக்கூடாது..! சரிதானே..?

2G Cell phones இயங்கும் frequency : 900 MHz (0.9 GHz)  to 1.8 GHz (1800 MHz)...!  
3G, 4G Cell phones இயங்கும் frequency : 1.8 GHz (1800 MHz)  to 2.4 GHz (2400 MHz)...! 
WLAN, WiFi, WiMax இயங்கும் frequency : 2.1 GHz (2100 MHz) to 2.4 GHz (2400 MHz)...!  

Bluetooth Headset இயங்கும் frequency : 900 MHz (0.9 GHz)  to 2.4 GHz (2400 MHz)..!
 
ஆக, ப்ளூடூத் கருவிகள் பயன்படுத்தும் ரேடியோ அலைகள்... மைக்ரோவேவ் frequency-ல் விழுகின்றன.  இருந்தாலும், செல்ஃபோன் அளவுக்கு இது பாதிக்காது என்கின்றனர் வல்லுனர்கள். காரணம்... இங்கே Bluetooth Receiver-க்கும் Bluetooth Transmitter-க்கும் உள்ள தூரம், செல்ஃபோன் டவருக்கும் (Base Station) செல்ஃபோனின் சிக்னல் Receiver-க்கும் உள்ள தூரம் போன்றது அல்ல என்பதால் அதில் அந்த அளவுக்கு சக்தி இருக்காது என்கின்றனர்.

ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) வெளியிட்டது போல, ப்ளூடூத் கருவிகளுக்கு அதன் உற்பத்தியாளர்களோ அரசுகளோ இதற்கான SAR அளவை ஏனோ சொல்ல வில்லை..! இது ஏன் என்று "கவனிக்கப்படவேண்டிய" ஒரு விஷயம்..!

ப்ளூடூத்  கருவிகளிலேயே மூன்று வகை சக்தி கொண்டவை உள்ளன. சில தளங்களில் இயங்கும் பெரிய அலுவலக கட்டிடங்களில் பல கணிணி மற்றும் பிரிண்டர்களை இணைக்க,  நீண்டதூர செயல்பாட்டிற்கு அதிக சக்தி கொண்ட class 1 ப்ளூடூத் கருவிகளும், சாதரணமாக நமது செல்ஃபோன் ஹெட் செட்டுக்களில் class 2 வகை  ப்ளூடூத் கருவிகளும் உபயோகிக்கப் படுகின்றன.  கணிணி திரையிலிருந்து ஒரு மீட்டருக்குள் உபயோகிக்கப்படும், ப்ளூடூத் மவுஸ், ப்ளூடூத் கீ போர்ட் போன்றவைக்கு class 3 வகை  ப்ளூடூத் கருவிகளும் உபயோகிக்கப்படுகின்றன


இதில், நமது ப்ளூடூத் ஹெட் செட்டுகள், ஒருவேளை class 1 வகையினை சார்ந்ததாகவே வைத்துக்கொண்டாலும், அது செல்ஃபோன் (250mW-2W) தரும் பாதிப்புக்களில் சராசரியாக பத்தில் ஒரு மடங்குதான் தருகிறதாம். எனில், நாம் செல்ஃபோனுக்காக உபயோகிக்கும் class 2 வகை  ப்ளூடூத் கருவிகள், class 1 வகையைவிட மேலே உள்ள அட்டவணைப்படி 40 மடங்கு தீங்கு குறைவு. எனில், செல்ஃபோன் தரும் தீங்கைவிட class 2 வகை ப்ளூடூத் கருவிகளின் தீங்கு...  நானூறு மடங்கு குறைவு..! அப்பாடா..! இனி இதை உபயோகிப்பவர்கள் தான் முடிவு செய்து கொள்ளவேண்டும். செல்ஃபோனை காதில் வைத்து பேசுவோரை பொறுத்தமட்டில் இது எவ்வளவோ தேவலாம்தானே..?

அதேநேரம், Cordless Phone-ஐ நீண்ட நேரம் பயன்படுத்தவேண்டாம். அவசரத்துக்கு வந்த அழைப்பை  உட்கார்ந்திருந்தவாறே உடனே ஏற்றுக்கொண்டு சுருக்கமாய் பேசிவிட்டு வைக்கலாம். தொடர்ந்து நீண்டநேரம் பேசவேண்டுமானால், அலுப்பு பார்க்கமால கொஞ்சம் எழுந்து சிறிது தூரம் வீட்டில் நடந்து சென்று landline-க்கு மாறிவிடுவதே உடலுக்கும் மூளை நலனுக்கும் ஆரோக்கியம் என்று அறியமுடிகிறது.




இந்த ப்ளூடூத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது' என்றால்... அருகருகே உள்ள... மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், டிஜிட்டல் கேமரா, பிரிண்டர்கள், டிஜிடல் ஆடியோ பிளேயர், டிஜிடல் வீடியோ பிளேயர்... இப்படி சில மின்னணு சாதனங்களுக்கு இடையே வயர்கள், கேபிள்கள் என்று எந்தவித இணைப்பும் இல்லாமல் செய்திகள், புகைப்படங்கள், பாடல்கள், ஒலி/ஒளிக்காட்சிகள், கோப்புகள் போன்ற எந்த தகவல்களையும் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு வயர்லெஸ் டெக்னாலஜிதான் நம்முடைய நவீனயுகத்தின் மற்றுமொரு மகத்தான கண்டுபிடிப்பான இந்த ப்ளுடூத் டெக்னாலஜி..! நமக்கு வேலைகளை மிகவும் எளிதாக்குகின்றன

ப்ளுடூத் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது என்பது மிக எளிதான காரியம் என்பதாலும், வயர் தொல்லை இல்லை என்பதாலும் இது செல்ஃபோனின் இயர்ஃபோனிலும், லேண்ட்லைன் ஃபோனில் கார்ட்(வயர்)லஸ் ஃபோனாகவும் சுலபமாக உருமாறி விட்டது. லேட்டஸ்டாக Car steering kit மூலம் காரை ஒட்டிக்கொண்டே... அதேநேரம்  பேசிக்கொண்டும் செல்லாம்..!

Bluetooth Earpiece மூலம் mp3 ஆடியோ மட்டும் கேட்பவர்களுக்கு ஒரு விஷயம் : --
இது ஒரு ப்ளூடூத் ரிசீவர் மட்டும்தான். காரணம், இதில் Mic இல்லாததால்... இதில் Bluetooth Headset அளவுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால், பாதி(!)பாதிப்பு உண்டு எனலாம். Bluetooth Headset-ல் Mic-ம் இருப்பதால், ப்ளூடூத் ரிசீவர் & ப்ளூடூத் டிரான்ஸ்மிட்டராகவும் இது செயல்படுவதை கவனிக்கவும். டபுள் ஆக்டிவ்..!

பதிவின் இறுதியாக... நம் தலைக்கு ஏற்படும் இந்த செல்ஃபோன் கதிர்வீச்சு பாதிப்பை கிட்டத்தட்ட 100% குறைக்க தற்போது நவீன கண்டுபிடிப்பு ஒன்று வந்துள்ளது. சாதாரன Earphone மூலம் கூட சிறிதளவு வெப்பபாதிப்பு  உலோக(wire) கம்பிகளின் conduction heat மூலம் காதுக்கு சென்று பின் வெப்பக்கதிர்வீச்சு பாதிப்பும் இருப்பதால், அதையும் இயன்றவரை முற்றிலும் இல்லாமல் ஆக்குவதற்காக, "Air-tube Headset" அல்லது "Bluetube Headset" என்று அழைக்கப்படுகின்ற (கீழே காட்டப்பட்டுள்ள) இந்த சாதனத்தை இனி வரக்கூடிய அனைத்து செல்ஃபோன் பெட்டிகளிலும் பார்க்கலாம். அந்தஅளவுக்கு இதற்கு இப்போது வரவேற்பு இருக்கிறது.




http://products.mercola.com/blue-tube-headset/
http://www.wisegeek.com/do-bluetooth-headsets-cause-cancer.htm
http://www.emfnews.org/are_bluetooths_headsets_safe.html
http://ezinearticles.com/?Will-Bluetooth-Headphones-Cause-Health-Problems?&id=4550489 
http://www.emfblues.com/Bluetooth-EMF-Safety-Health-Effects-Dangers-Bluetooth-Headsets-Dangerous-Radiation.html




தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்...




Thursday, May 12, 2011

'ஆபாசம் நின்று கொல்லும்’


ரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம் மிக முக்கிய காரணமாகிறது.

வரலாற்று ஆசிரியர் எட்வாட் கிப்பன், ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்களைப் பட்டியல் இடுகிறார்.

1,திருமண முறிவுகள் அதிகமானது

2.அதிக வரி வசூலித்து மக்களுக்கு இலவச ரொட்டியும் கேளிக்கைகளும் அளித்தது

3.இன்ப வெறி-அதுவும் விளையாட்டுப் போட்டிகள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது.

4.மக்களின் தரம் தழ்ந்ததை உணராமல்,படைக்கலன்களை வாங்கிக் குவித்தது.
                                                                                                                                                                          
5.சமயம் என்பது வெறும் குறியீடாக மாறி தினசரி வாழ்க்கைக்கு சம்பந்தம் 
இல்லாமல் போனது.


இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் கேளிக்கையில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் -நுகர்வுகளில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் அழிவுகளின் பக்கமாகத்தான் செல்ல வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய மேலை நாடுகள் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

அங்கு நிலைமை என்ன? திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.லிவிங் டுகெதர் -கொஞ்ச நாளைக்குச் சேர்ந்து வாழ்வோம்; பிரிந்து விடுவோம்; கல்யாணமெல்லாம் தேவையில்லை என்கிற நிலை அங்கு உருவாகி விட்டது.

திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது மிகச் சாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது.

இதன் காரணமாக சிங்கிள் பேரண்ட் ஃபேமிலி -தாயுடனோ அல்லது தந்தையுடனோ வாழும் நிலை. மொத்தத்தில்,குடும்ப வாழ்வே அங்கு சிதைந்துப் போய் விட்டது.

இன்று ஆபாசம் ஆக்டோபஸ் மாதிரி ஆகி விட்டது. அதனுடைய கால்கள் பதிக்காத இடமே இல்லை. ஆபாசத்திலிருந்து தப்பிக்க முடியாத நிலை இன்று உருவாகி விட்டது.

ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்கிற போது, இந்த ஆபாசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்று சொல்கிறார்கள். ஆபாசத்தை வரையறை செய்யவே முடியாது என்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள், காலத்துக்கு காலம் இதனுடைய வரைமுறை மாறும் என்கிறார்கள்.

இங்கே ஆபாசமாகக் கருதப்படுவது மேலை நாட்டில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை; ஒரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவது இன்னொரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை.

ஆகவே ஏன் தலையைப் போட்டு உடைத்துக் கொள்கிறீர்கள்? இது முடியவே முடியாத காரியம் என்று சொல்கிறார்கள்.

ஏன் முடியாது? ஆபாசத்தை ஏன் வரையறை செய்ய முடியாது?
.மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காதிருந்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.மறைவில் பேச வேண்டியதை வெளியில் பேசினால் ஆபாசம்.

.நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை வெளிப்படையாகச் செய்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு எந்த உறவை வைத்துக் கொண்டாலும் அது ஆபாசம்.

.இச்சைகளையும் வக்கிரங்களையும் தூண்டக் கூடிய எல்லாச் செயல்களும் ஆபாசம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பு.

இன்று சினிமாவிலே பெண்களை ரசித்துப் பார்க்கிறீர்களே, உங்கள் பெண்களை இது போன்ற காட்சிகளில் நடிக்க விடுவதற்கு தயாரா?

உங்களுக்கு பாவம் என்றால், உங்களுக்கு ஆபாசம் என்றால்,உங்களுக்கு அசிங்கம் என்றால் அந்தப் பெண்களுக்கும் அது ஆபாசம் தான்.

ஒரு தீமைக்கு உடனடியாக யாரும் பலியாகி விடுவதில்லை. அது சில கட்டங்களைக் கடந்து வருகிறது.

முதலாவதாக அப்சர்வேஷன் -பார்த்தல்; இரண்டாவதாக இமிடேஷன் -அதைக் காப்பி அடித்தல்; மூன்றாவதாக டிசென்சிடிசெஷன்  -மரத்துப் போதல். கடைசியில் ஜஸ்டிபிகேஷன் -அதை நியாயப்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறோம்.

நாமே இதற்குப் பலியாகி விட்டோமே! குடும்பத்தோடு உட்கார்ந்து சினிமா பார்க்கிறோமே! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பார்க்கிறோமே! அப்படியானால் நாம் மரத்துப் போன மனிதர்களாக மாறி விட்டோம் என்பதுதானே பொருள்?

மக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும்? மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள்.

நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா?

ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி...! தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை.

பெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம்.
அடுத்து ஆணாதிக்க உணர்வுகள் ஒரு காரணம்.

அடுத்தப்படியாக கட்டுபாடற்ற பாலியல் சுதந்திரம். செக்ஸ் எனபது சுதந்திரமானது. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்?நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் குறுக்கிடாதீர்கள் எனும் மனப்பான்மை.

மக்களிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம்.

ஆபாசத்தை எதிர்ப்பது எப்படி?

ஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.

’ஆபாசத்தைப் பார்க்கதே; ஆபாசத்தைப் பேசாதே; ஆபாசத்தைச் செய்யாதே!

உங்கள் கண்களை,உங்கள் காதுகளை,உங்கள் நாவை,உங்கள் கால்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


வெட்கத் தலங்களின் மூலம் நிகழ்த்தப்படுவது மட்டுமல்ல ஆபாசம்...!
‘கண்கள் செய்யும் விபச்சாரம்;காதுகள் செய்யும் விபச்சாரம்;கால்கள் செய்யும் விபச்சாரம்’ என்று நபிகள் (ஸல்) அவர்கள் பட்டியல் போட்டார்கள்.

 இறுதியாக, ஆபாசத்தை வளர்க்கிறார்களே அவர்களிடம் ஒரு வேண்டுகோள்:
‘உங்கள் வயிற்றை வளர்ப்பதற்காக எங்கள் ஒழுக்கத்தைச் சாகடிக்காதீர்கள்...


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....


Skype தொழில்நுட்பத்தை Microsoft கையகப்படுத்தியது....





VOIP என்று சொல்லக் கூடிய இணையத்தின் வழியே ஒருவருடன் மற்றொருவர் வீடியோ கான்ப்ரென்சிங் (video conference ) மூலம் உரையாடக் கூடிய வசதியை இலவசமாக கொடுத்து வந்த நிறுவனம் Skype. இன்று தொழில்நுட்ப ஜாம்பவாஙன்களில் ஒன்றான Microsoft ன் வசம் வந்துவிட்டது. இது வரை இல்லாத வகையில். மிகப் பெரும் தொகையான $8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து கையகப்படுத்தியுள்ளது.
இப்பொழுது உள்ள நிலையில் Skype நிறுவனமானது 660 மில்லியனுக்கும் மேலான மக்களால் பயன்படுத்தும் சேவையாக உள்ளது. இப்பொழுது Microsoft ன் வசம் Skype வந்துவிட்டதால் என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் இதன் மூலம் பெரிய மாற்றங்களும் நடக்கலாம். காரணம் Microsoft மொபைல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இப்பொழுது Skype சேவையை இணைப்பதன் மூலம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் இருப்பதை உணர முடிகிறது .
இதற்கு முன் Microsoft நிறுவனம் 1997 ல் $400 மில்லியன் அமெரிக்க டாலருக்கு Hotmail சேவையை வாங்கியது. ஆனால் பின்னாளில் வந்த மின்னஞ்சல் சேவைகளால் Hotmail சேவை பின்னுக்கு தள்ளப்பட்டது. இதே நிலைமை Skype ற்கும் ஏற்படுமோ என்று கூட என்ன தோன்றுகிறது. ஆனால் Microsoft எவ்வாறு யோசித்துள்ளது என்பது தெரியவில்லை.
எனினும் இது பெரிய முயற்சி காரணம் இதற்காக Microsoft நிறுவனம் கொடுத்துள்ள தொகை மிகப் பெரியது. அரண்மனையில் இருப்பவர் முதல் அடுப்பங்கரையில் இருப்பவர் வரை அனைவரும் உபயோகப் படுத்தும் மொபைல் சேவையில் இந்த புதிய முடிவு எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.....

Wednesday, May 11, 2011

facebook ல் பிரிந்து சென்ற நண்பரை கண்டுபிடியுங்கள்....


















தெரிந்து கொள்ளாமல் நட்பாவது, தெரிந்ததனால் விலகிப் போவது. Facebook ன் எழுதப்படாத விதி இது. ஒரு நாள் பார்க்கும் பொழுது இருந்த நண்பர்களின் எண்ணிக்கை அடுத்த நாள் இல்லாமல் போகலாம். Facebook யார் விலகினார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரிவிக்காது. ஆனால் இதை வேறு முறையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு https://www.twentyfeet.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். இதில் நீங்கள் உறுப்பினராக இணைந்த பின்னர் உங்களுடைய Facebook அக்கவுண்டை இதில் இணைக்கவும். யாரேனும் நண்பர்கள் உங்களை விட்டு விலகினால் உங்களுடைய மின்னஞ்சலுக்கு அறிவிப்பு வந்துவிடும். ஒருவேளை அந்த நபர் Facebook ல் இருந்தே கூட விலகி இருக்கலாம்.
மேலே கூறிய முறை உங்களுக்கு புரியவில்லை எனில்http://apps.facebook.com/twentyfeet/ இந்த தொடர்பை பயன்படுத்தவும்.
குறிப்பு : இதன் மூலம் Facebook ல் ஏதாவது ஒன்றை மட்டுமே இலவசமாக எப்பொழுதும் கண்காணிக்க முடியும். அதாவது உங்களுடைய நண்பர் எண்ணிக்கை மட்டும் கண்காணிக்க விரும்பினால், அதற்கு மேல் உங்கள் Group அல்லது Fan Page ஆகியவற்றை கண்காணிக்க $2.49 கட்டணமாக ஒரு வருடத்துக்கு செலுத்த வேண்டும். எனினும் 30 நாளைக்கு எல்லா வசதிகளையும் பெறலாம் அதற்கு மேல் உபயோகப் படுத்தத்தான் மேல் சொன்ன விதிமுறை.
முக்கிய குறிப்பு : ஒரு அக்கவுண்ட்டிற்கு ஏதாவது ஒன்றை கண்காணிக்கலாம் என்றால். ஒவ்வோரு அக்கவுண்டிற்கும் ஒன்றை கண்காணிக்கலாம் தானே. பல மின்னஞ்சல் (e-mail) முகவரி வைத்திருப்பவர்களுக்கு இந்த யுத்தி உதவும்.

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Monday, May 9, 2011

மெஸ்சியை விட ரூனி சிறந்த வீரர்: ஹெர்னான்டஸ்.....

மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னால் கூட்டாளி வீரரான வெய்ன் ரூனி லயோனல் மெஸ்சியை விட சிறந்த வீரர் என ஜாவியர் ஹெர்னான்டஸ் கூறினார்.
நடப்பு சீசனில் இளம் மெக்சிகோ வீரர் இங்கிலாந்து சர்வதேச வீரர்களுடன் இணைந்து சாதனை படைத்துள்ளார். பிரிமியம் லீக்கின் அறிமுக சீசனில் 17 கோல்கள் அடித்துள்ளார். அதே நேரத்தில் ரூனி 15 கோல்கள் அடித்துள்ளார்.
ரூனியுடன் இணைந்து ஆடுவது குறித்து மெக்சிகோ வீரர் ஹெர்னான்டஸ் குறிப்பிடுகையில் ரூனி யுனைடெட் நம்பர் 10 ம் இலக்கத்தில் ஆடக் கூடிய அற்புதமான வீரர் அவர் பார்சிலோனாவின் 10 ம் நம்பர் வீரர் மெஸ்சியை விட சிறப்பான ஆட்டத்திறன் கொண்டவர் என்றார்.
வெய்னே ரூனி ஆட்டத்தை தொலைவில் நின்று ரசித்திருக்கிறேன். தற்போது அவருடன் இணைந்து ஆடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என 22 வயது வீரர் ஹெர்னான்டஸ் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ரியல்மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ வித்தியாசமான ஆட்ட நுணுக்கங்களை கொண்டவர். ஆனால் ரூனி சூப்பர் கிளாஸ் என்றும் புகழாரம் சூட்டினார்.

Wednesday, May 4, 2011

How to Create a Computer Lock?, Learn Step by Step....


In this article I’m describing how to create a shortcut to lock the computer. By reading this you will learn how to create a desktop icon to lock the lock the computer. By having a desktop icon for lock the computer it is very easy to you to lock the computer instantly.
Step1- Right click on the desktop and select new select shortcut. (New-->Shortcut)

Step2 – Then type in the text box rundll32.exe user32.dll,LockWorkStation and click next.

 
Step3 – Then give an appropriate name for the lock. (lock.exe)

Then you can see the desktop icon that you created is in the desktop. Next we going to change the icon and select a suitable icon for it. For that
Step4 – Right click on the lock icon select properties select shortcut select change icon. (Properties-->shortcut-->change icon).
Step5 –In the “Lock for icon in the file” type Shell32.dll there are so many icon select suitable icon for the lock. Then select apply then select ok.

Step6 –just double click on the lock icon. Then lock working. If you want again come to work in the computer type your username and password.
So now your lock created. Use it.




Thanks






Monday, May 2, 2011

படித்ததில் பிடித்தது...

தமிழா நீ மறவாதே , உன் தாய்மொழி தமிழ் என்று.


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்

சோனிக்கு வந்த சோகம்...



சோனி என்றால் யார் என்று என்ன வேண்டாம் இது ஜப்பானிய கம்பெனியான சோனி நிறுவனமே. வெறும் 7,70, 00, 000 மக்களின் ஆவணங்களை மட்டுமே எந்த களவாணிப் பயலிடமோ கோட்டை விட்டு விட்டது.  ஏப்ரல் 20 ம் தேதி முதல் தன்னுடைய Playstation சேவையை நிறுத்தி வைத்துள்ள சோனி நிறுவனம் நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. மேலும் இந்த வாரத்தில் தன்னுடைய Play Station சேவைகளை திரும்பவும் செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளது.
இந்த திருட்டில் இடுபட்டவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. தொழிநுட்பத்தில் சிறந்து விளங்கும் கம்பெனிகளில் ஒன்றான சோனி நிறுவனத்துக்கே இந்த நிலைமை என்று என்னும் பொழுது  வருத்தமாக இல்லை மாறாக பயமாக உள்ளது. காரணம் இந்த திருட்டில் ஈடுபட்ட HACKERS என்று சொல்லக் கூடிய களவாணிகள் திருடி இருப்பது எதோ சோப்பு சீப்பு இல்லை மக்களின் சொந்த விவரங்கள் மற்றும் அவர்களுடைய CREDIT CARD போன்ற முக்கியமானவற்றை திருடியுள்ளார்கள்.
எப்போடியோ எத்தனுக்கு எத்தன் வையகத்தில் உண்டு என்பதை படு சுவாரசியமாக காட்டி விட்டார்கள். விளையாட்டு வினையாகும் என்பார்கள் , சரிதான் இங்கு சோனியின் விளையாட்டு சாதனம் அதனுடைய 7,70, 00, 000 மக்களின் வாழ்க்கையில் விளையாட்டு காட்டி விட்டது.
தீராத விளையாட்டுப் பிள்ளை :-)
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Sunday, May 1, 2011

Osama bin Laden killed in Pakistan..


US president confirms al-Qaeda leader's death, saying he has been killed in firefight following US raid in Abbottabad.

Osama bin Laden, the leader of al-Qaeda, is dead.
US president Barack Obama said bin Laden, the most-wanted fugitive on the US list, has been killed on Sunday in a US operation in the Pakistani city of Abbottabad, about 150km north of Islamabad.
"Tonight, I can report to the people of the United States and the world, the United States had carried an operation that has killed Osama Bin Laden, a terrorist responsible for killing thousands of innocent people," Obama said in a statement.
"Today, at my direction, the United States carried out that operation... they killed Osama bin Laden and took custody of his body. 
"The death of bin Laden marks the most significant achievement to date against al-Qaeda. 
"We must also reaffirm that United states is not and will never be at war against Islam. Bin Laden was not a Muslim leader, in fact, he slaughtered many Muslims," Obama said.


US celebrations.

As the news of bin Laden's death spread, crowds gathered outside the White House in Washington DC to celebrate.  
Former US president George Bush called his death a "momentous achievement". 
"The fight against terror goes on, but tonight America has sent an unmistakable message: No matter how long it takes, justice will be done," Bush said in a statement.
According to Al Jazeeera's Rosalind Jordan in Washington, the operation had been in the making for the last nine or 10 months. 
"The fact that it happened inside Pakistan, there have been suggestions that Pakistani intelligence may have been protecting them," she said. 
Patty Culhane, another Al Jazeera correspondent, said the US authorities got intelligence last September and were able to track bin Laden down through his couriers. They followed them to his compound which is reported to be worth over a million dollars. 
Reporting from Pakistan, Al Jazeera's Kamal Hyder said the development had caught a lot of people by surprise .
"He was considered by many as a hero, but not to the extent that people would come out on the streets. The reaction so far not likely to be strong on the streets, perhaps a protest here or there by the religious parties," he said.
'Symbolic victory'
Qais Azimy, Al Jazeera's correspondent in Kabul, said Afghan officials described bin Laden's killing as a "symbolic victory", since he was no longer directly connected to the group's field operations. 
"This organisation (Al Qaeda) is more than Bin Laden, it may be symbolised by Bin Laden, but it definitely is more than Bin Laden"
Mark Kimmit, US military analyst
Mark Kimmit, a US military analyst, said bin Laden's death "was not the end of terrorism, but an end of a chapter."
"Capturing or killing bin Laden has more iconic value. It will have symbolic value, because it has been a number of years since bin Laden has exercised day to day control over operations. We still have an al-Qaeda threat out there and that will be there for a number of years. 
"This organisation (al-Qaeda) is more than bin Laden, it may be symbolised by bin Laden, but it definitely is more than bin Laden," he said. 
It is, however, a major accomplishment for Obama and his national security team. Obama's predecessor, George Bush, had repeatedly vowed to bring to justice the mastermind of the September 11, 2001, attacks on New York and Washington, but never did before leaving office in early 2009.
He had been the subject of a search since he eluded US soldiers and Afghan militia forces in a large-scale assault on the Tora Bora mountains in 2001. The trail quickly went cold after he disappeared and many intelligence officials believed he had been hiding in Pakistan.

While in hiding, bin Laden had taunted the West and advocated his views in videotapes spirited from his hideaway.

Besides September 11, Washington has also linked bin Laden to a string of attacks - including the 1998 bombings of American embassies in Kenya and Tanzania and the 2000 bombing of the warship USS Cole in Yemen.
Having the body may help convince any doubters that bin Laden is really dead.

source taken from http://english.aljazeera.net/news/americas/2011/05/2011522132275789.html