Tuesday, March 6, 2012

Download FREE Windows 8 Customer Preview Edition.....


பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய Windows 8ன் சோதனை பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Microsoft நிறுவனமானது Windows 8ன் சோதனை பதிப்பை Desktop Version, Mobile Version என இரண்டு விதங்களில் வெளியிட்டுள்ளது. இதனால் Microsoft-ன் பொருட்கள் பயனாளர்களை அதிகளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பு அம்சமாக cloud தரவு பரிமாற்ற முறை, தொடுதிரை, வேகம் என்பனவற்றை Microsoft நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Windows 8ன் beta பதிப்பு வெளியிடப்பட்டு இதுவரை 3 மில்லியன் பயனாளர்கள் தரவிறக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கம் செய்ய - http://windows.microsoft.com/en-US/windows-8/download
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.....

Monday, March 5, 2012

ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக(Hard Disk) பயன்படுத்து​வதற்கு!


ணைய உலகில் ஓன்லைன் தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த தொடர்பாடல் ஊடகமாக காணப்படும் ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக(hard disk) பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் உங்கள் கணணியின் தகவல் சேமிப்பதற்கான வசதியை மேலும் 25MB வரை அதிகரிக்க முடியும்.

இதற்காக வசதியை Gmail Drive என்ற இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது. இதனைப் பயன்படுத்தி அமைக்கப்படும் மெய்நிகர்(virtual) வன்தட்டில் drag-drop முறை மூலம் தகவல்களை சேமிக்க முடியும். இச்சேவையை பெறுவதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்நிகர் வன்தட்டை உருவாக்குவதற்கான படிமுறைகள்:

1. இந்த தளத்திற்கு சென்று http://www.filehippo.com/download_gmail_drive/ Gmail Drive என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும்.

2. தற்போது உங்களது mycomputer பகுதியில் மேலதிகமாக ஒரு வன்தட்டின் உருவம் காணப்படும். அதில் Right click செய்து தோன்றும் மெனுவில் Login As என்பதனை தெரிவு செய்யவும்.


3. அதன் பின் தோன்றும் வின்டோவில் உங்களுக்குரிய பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுளையவும்.


4. இப்போது குறித்த வன்தட்டை பயன்படுத்த முடியும். வன்தட்டை செயலிழக்க செய்வதற்கு அதன்மேல் Right click செய்து தோன்றும் மெனுவில் Log out என்பதை தெரிவு செய்யவும்.


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.....