Wednesday, November 28, 2012

இசையமைப்பதற்கு கூகுள் குரோம்பிரவுசர் போதுமே...



இப்போது கூகுள் குரோம்பிரவுசர் மட்டுமே போதும் அல்லது ஜாம் வித் குரோம் -ஐ நாம் டவுன் லோட்  செய்ய வேண்டு நம்மிடம் இவற்றிற்கு எந்த இசைக்கருவியோ, மென்பொருட்களோ தேவையில்லை.அல்லது  உலவி இருந்தல்மட்டுமே போதும் . இசை அமைப்பு கருவிகள் திராயில் தோன்றும்.  jamwithchrome.com இணையத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் இசைக்கருவியை தெரிவு செய்யவும். 19 இசைக்கருவிகளை 3க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் இணைந்து வாசிக்கலாம்.
Source Thanks to Techtamil....
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....


Monday, November 5, 2012

சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜேர்மன் உலக சாதனை படைத்துள்ளது







சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜேர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜேர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜேர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.

இந்தாண்டு ஜேர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.

இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)

இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ‌ஜேர்மன் சாதனை படைத்துள்ளது.


FYI:

எங்கள் ஊரில் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தான் செயல் படுத்துவோம் . இருக்கிற நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்போமே தவிர
சூரிய மின்சாரம் தயாரிக்க விட மாட்டோம்.... 


தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....