Monday, April 16, 2012

PINTEREST சமூக இணைய தளம் அபார வளர்ச்சி பாதையில்...


சமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம்.
பெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும். ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள சமூக இணையதளம் Pinterest.

சிறப்பம்சங்கள்:
  • இந்த தளத்தில் நீங்கள் போட்டோ அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். சாதாரண செய்திகளை பகிர முடியாது.
  • இந்த தளத்தின் தோற்றம் பெரும்பாலானவர்களை கவரக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த Pinterest தளத்தில் உங்கள் பிளாக்கில் உள்ள போட்டோக்களை நேரடியாக பகிர்ந்து உங்கள் பிளாக்கின் வாசகர்களை (Traffic) அதிகரித்து கொள்ளலாம்.
  • போட்டோ அல்லது வீடியோ பகிரும் பொழுது அதற்கு சம்பந்தமாக தனி தனி பிரிவுகளில் பகிரலாம். மொத்தம் 30 க்கும் அதிகமான வகைகள் இந்த தளத்தில் உள்ளது.
  • குறைந்த நாட்களிலேயே மாதத்திற்கு 21 மில்லியன் வாசகர்களை பெறும் சிறந்த சமூக இணையதளமாகும்.
ஆனால் இந்த சமூக இணையதளத்தில் நேரடியாக கணக்கு open செய்து உபயோகிக்க முடியாது. முதலில் இந்த தளத்தில் சென்று உங்கள் ஈமெயிலை கொடுத்து INVITE அனுப்ப வேண்டும். பிறகு அவர்கள் உங்களுக்கான உறுப்பினர் விவரங்களை மெயிலில் அனுப்புவார்கள். பிறகு தான் உங்களால் Pinterest தளத்தை உபயோகிக்க முடியும்.
உபயோகிப்பது எப்படி:
Approval கிடைத்தவுடன் இந்த தளத்தில் நுழைந்து Add என்பதை அழுத்தி வரும் window-வில் உங்களுடைய போட்டோ இணையத்தில் இருந்தால் Add a Pin என்பதையும், உங்கள் கணினியில் இருந்தால் Upload a Pin என்பதையும் அழுத்தி உங்களுடைய போட்டோவை தேர்வு செய்து உங்களுடையை போட்டோவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.
இந்த சமூக இணையதள முகவரி -http://pinterest.com/

Thanks to TechTamil

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!...


திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!



சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு.
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்.
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய்!

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது.
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய்!

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி ".
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா..
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்........
2 வருடமொருமுறை கணவன்...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா. சாபமா..

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்.
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்.

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்.
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்.

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா?
பணத்தைத் தரும்... பாரத வங்கி! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்.
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்.
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்.
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா.
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )....

இந்த பதிவு இன்டர்நெட் இல் நன் படித்து ரசித்தது..அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

Saturday, April 14, 2012

அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்...

கணினியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும். இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம். ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று. இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை ஒட்டு மொத்தமாக தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் கணினியில் நிறுவி விடலாம். நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு Get Installer என்ற button click செய்து விட்டால் நீங்கள் செலக்ட் செய்த மென்பொருள் தரவிறக்கப்பட்டு உங்களது கணணியில் நிறுவப்பட்டுவிடும்.

இணைய தள முகவரி -Nite.com

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Friday, April 13, 2012

புரோகிராமிங் கற்றுக்கொள்ள இலவச இணைய தளம்!

எப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது.

வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.

இவை தவிர, புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே, புரோ கிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக, இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது. 

இதன் பெயர் கோட் அகடமி (Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங் (coding) எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் இணைய தள முகவரி www.codeacademy.com இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது. 

நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும்பாடம், அப்படியேகொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது. அதன் பின்னரே, நம்மை தளத்தில் பதியச் சொல்லி கேட்கிறது. இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. 

பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன. புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல் பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.
WEbsite ---> http://www.codeacademy.com
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Saturday, April 7, 2012

ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.


  • 168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
  • 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய பிளாக்குகள் துவக்கப்படுகின்றன.
  • 694,445 தேடல்கள் கூகுள் தேடியந்திரத்தில் நிகழ்கிறது.
  • 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.
  • 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகிறந்து.மற்றும் 510,040 புதிய கமெண்ட்டுகள் பேஸ்புக்கில் போடப்படுகிறது.
  • 98,000 புதிய Tweets ட்விட்டரில் பகிரப்படுகிறது மற்றும் 320+ புதிய அக்கௌன்ட்டுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகிறது.
  • யூடியூபில் 600+ புதிய வீடியோக்கள் பகிரப்படுகிறது மற்றும் 25+ மணி நேரம் வாசகர்களால் செலவழிக்கப்படுகிறது.
  • 1700+ பயர்பாக்ஸ் உலவி டவுன்லோட் செய்யப்படுகிறது.
  • ஸ்கைப்பில் 370,000 நிமிடங்கள் பேசப்படுகிறது.
மேலும் விவரங்கள் அறிய மேலே உள்ள படத்தில் கிளிக் செய்து பெரிது படுத்தி பாருங்கள் தெரியும்.
 
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்....

Tuesday, April 3, 2012

Bluetooth பெயர் காரணம்..

 

Bluetooth பெயர் காரணம்

இன்று பலர் Bluetooth உபயோகிக்கிறோம்  Bluetooth தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும் இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் Denmark, Sweeden, Norway மற்றும் Finland நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற Denmark அரசர் ஹெரால்ட் புளுடூத் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.
இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், Norway நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.....