Tuesday, March 15, 2011

என்ன ஆச்சு தோனிக்கு...!!!!!


சென்னை: இந்திய கேப்டன் தோனி "பேட்டிங்கில்' தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த 10 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய வீரர்கள் ரசிகர்களுக்காக அல்லாமல் தேசத்துக்காக விளையாட வேண்டும் என "அட்வைஸ்' செய்துள்ள இவர், முதலில் தனது ஆட்டத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. இதில், இந்திய அணி கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அணியில் சமீபத்திய செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் எல்லாம் வீணாக வீழ்ச்சியை சந்திக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக "டை' செய்தது. அடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதற்கு கேப்டன் தோனியின் தவறான உத்திகள் முக்கிய காரணம். "பேட்டிங் ஆர்டரை' மாற்றியது, ஹர்பஜனுக்கு பதில் நெஹ்ராவிடம் கடைசி ஓவரை வீசச் சொன்னது என நிறைய தவறுகள் செய்தார். தவிர, இவரது பேட்டிங்கும் இப்போது எடுபடுவதில்லை.

10 போட்டிகளில்...
கடந்த பத்து போட்டிகளில் தோனி 171 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் விபரம்:
எதிரணி ரன்கள்
தென் ஆப்ரிக்கா 25
தென் ஆப்ரிக்கா 38
தென் ஆப்ரிக்கா 5
தென் ஆப்ரிக்கா 2
தென் ஆப்ரிக்கா 5
வங்கதேசம் பேட் செய்யவில்லை
இங்கிலாந்து 31
அயர்லாந்து 34
நெதர்லாந்து 19*
தென் ஆப்ரிக்கா 12*



0 comments:

Post a Comment