Wednesday, April 27, 2011

சோனி நிறுவனம் புதிய இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது....














Sony launches two Android 3.0 tablets. டேப்லட் கணிணி சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் சோனி நிறுவனம் இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இது கூகுளின் மென்பொருளை மையமாக கொண்டு உருவாக்கப் பட்டது. ஜப்பான் கம்பெனியான சோனி இந்த டேப்லட்கள் மற்ற சோனியின் சாதனங்களுடன் இயங்க வல்லது என்று தெரிவித்து உள்ளது.
இந்த டேப்லட்கள் S1 மற்றும் S2 என்று பெயரிடப் பட்டுள்ளது. S1 டேப்லட் ஆனது உயர்ரக பொழுதுபோக்கை முதன்மையாக கொண்டது. S2 டேப்லட் ஆனது தொலை தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் மையமாக கொண்டது.
இந்த இரண்டு டேப்லட்களிலுமே Wifi , 3G மற்றும் 4G வசதிகள் உள்ளது. இதன் மைய நோக்கமே விளையாட்டு , இணைய புத்தகங்கள் மற்றும் வீடியோக்களை சோனியின் “Premium Network Services” என்ற சேவையின் மூலம் மக்களுக்கு தருவதுதான்.
முதலில் காட்டப்பட்டுள்ளது S1 டேப்லட் ஆகும்.  இது 9.4 இன்ச் தோடு இரையைக் கொண்டது. மேலும் இது “off- center of gravity ” என்ற முறையில் கையில் எளிதாக பிடித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இரண்டாவதாக கட்டப் பட்டுள்ளது S2 டேப்லட் ஆகும். இது இரண்டு 5.5 இன்ச் தோடு இரையைக் கொண்டது. இதை மடித்தும் வைத்துக்கொள்ளலாம். இந்த தொடுதிரைகளை ஒரே திரையாகவும் உபயோக்கிலாம் இல்லையெனில் இரு வேறு திரைகளாவும் பயன்படுத்தலாம்.
இந்த சோனியின் “premium network service” மூலம் பெறக்கூடியவை Qriocity music, video service மற்றும் PlayStation Suite.
இந்த PlayStation Suite மூலம் உண்மையான PlayStation விளையாட்டுக்களை அதே தெளிவுடன் இந்த டேப்லட்களில் விளையாட முடியும். மேலும் இதை மற்ற சோனி சாதனங்களை இயக்கும் ரிமோட் கண்ட்ரோலாகவும் உபயோகிக்க முடியும்.
சோனி நிறுவனத்தின் வைஸ் ப்ரசிடன்ட் Kunimasa Suzuki , புதுவிதமான பொழுதுபோக்கு சாதனங்களை மற்றும் வாழ்கையின் தேவைக்கேற்ற வகையில் அமைக்கப்பட்ட சாதனங்களை மக்களுக்கு வழங்கும் என்று தெரிவித்து உள்ளார்.
எது எப்படியோ ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக மிகப் பெரும் பலத்துடன் பல நிறுவங்கள் தொழிற்ச்சந்தையில் இறங்கிவிட்டது. யார் கண்டது அடுத்த அரசு அனைவருக்கும் இலவசமாக இந்த டேப்லட்களை கூட விநியோகிக்கலாம்....
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்...

0 comments:

Post a Comment